ஆஸ்கர் விருதுக் குழுவில் இணைய அழைப்பு: கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஆஸ்கர் விருதுக் குழுவில் இணைய அழைப்பு: கமலுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
Updated on
1 min read

சென்னை: ஆஸ்கர் விருதுக்கான குழுவில் உறுப்பினராக இணைவதற்கான அழைப்பினை பெற்றிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி
கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள். மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதமான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது” என்று தெரிவித்துள்ளார்.

உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான…

திரைத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக் குழுவில் இணைய நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல இந்தியில் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மொத்தம் 534 பேருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக் குழுவில் மணிரத்னம், ராஜமவுலி, ஐஸ்வர்யா ராய், சாபு சிரில், கரண் ஜோஹர், ராம் சரண், சல்மான் கான், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in