சிம்புவின் ‘மாநாடு 2’ உருவாவது உறுதி!

சிம்புவின் ‘மாநாடு 2’ உருவாவது உறுதி!
Updated on
1 min read

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி இணைந்து ‘மாநாடு 2’ படத்தில் பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள்.

நீண்ட வருடங்கள் கழித்து சிம்புவுக்கு பெரும் வெற்றியை அளித்த படம் ‘மாநாடு’. இதன் டைம் லூப் காட்சிகள், காமெடி, திரைக்கதை, எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது இதன் 2-ம் பாகம் உருவாக இருக்கிறது.

சிம்பு மற்றும் வெங்கட்பிரபு இருவருமே வெவ்வேறு படங்களில் மும்முரமாக இருக்கிறார்கள். தங்களுடைய பணிகளை முடித்துவிட்டு ‘மாநாடு 2’ படத்தில் பணிபுரிய முடிவு செய்திருக்கிறார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனையும் சுரேஷ் காமாட்சி தயாரிக்க முன்வந்திருக்கிறார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாநாடு’. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in