‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டாரா மணிரத்னம்? - மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம்

‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டாரா மணிரத்னம்? - மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம்
Updated on
1 min read

சென்னை: ‘தக் லைஃப்’ படம் குறித்து ரசிகர்களிடம் இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, நாசர், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தக் லைஃப்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. பலரும் இப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை விமர்சன ரீதியில் வெகுவாக சாடினர். இப்படம் தொடர்பான ட்ரோல்களும் மீம்களும் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்து ஏமாந்த ரசிகர்களிடம் தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று மணிரத்னம் கூறியதாக இன்று காலை முதல் ஊடகங்களில் செய்தி பரவியது. பலரும் அதனை பகிர்ந்து வந்தனர். இந்த சூழலில் ’தக் லைஃப்’ திரைப்பட விவகாரத்தில் மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், அப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதால் அவர் மன்னிப்புக் கோரியதாக வரும் தகவல் தவறானது என்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in