அஜித் உடன் இணையும் மோகன்லால்?

அஜித் உடன் இணையும் மோகன்லால்?
Updated on
1 min read

அஜித்துடன் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு தனது அடுத்த படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார் அஜித். ஆனால், அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்தான் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகிவிட்டது. முதலில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். இது குறித்து விசாரித்தபோது, உண்மை தான். ஆனால், மோகன்லால் இன்னும் நடிப்பது உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்கள். விரைவில் படப்பிடிப்பு தேதி முடிவானவுடன், மோகன்லால் நடிப்பதை உறுதி செய்வார்கள் எனத் தெரிகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் எனத் தெரிகிறது. அதற்குள் கார் ரேஸ் பணிகளை முடித்து அஜித் திரும்பியவுடன் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்குள் முதற்கட்டப் பணிகள், நடிகர்கள் ஒப்பந்தம் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in