‘கருப்பு’ - ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட தலைப்பு!

‘கருப்பு’ - ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட தலைப்பு!
Updated on
1 min read

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்துக்கு ‘கருப்பு’ என தலைப்பு வைத்துள்ளது படக்குழு. இந்த அறிவிப்பு சமூக வலைதளத்தில் அறிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

ரேடியோ ஜாக்கி, நடிகர், கதாசிரியர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனது திறனை நிரூபித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இப்போது சூர்யா நடிப்பில் இயக்குநராக தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் அறிவிப்பு வெளியானது. பட பூஜை, போட்டோ ஷூட், படப்பிடிப்பு என இந்தப் படத்தின் பணிகள் அடுத்தடுத்து வேகமெடுத்தது. இதில் நாயகனாக சூர்யா நடிக்கிறார். அவர் நடிக்கும் 45-வது படம் என்பதால் இந்த படம் ‘சூர்யா 45’ என அறியப்பட்டது. இந்நிலையில், இந்த படத்துக்கு ‘கருப்பு’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு சமூக வலைதளத்தில் போஸ்டர் மூலம் பகிரப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் கிட்டத்தட்ட நிழல் வடிவில் (Silhouette) உள்ளது. அதில் கையில் பெரிய அரிவாள் உடன் வேட்டி மற்றும் சட்டை அணிந்தபடி சூர்யா நிற்கிறார். பின்னணியில் அய்யனார் குதிரை மீது வீற்றிருக்கும் சிலை உள்ளது. இந்த போஸ்டரை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் கிராமத்து கதைக்களத்தை கொண்டிருக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா, யோகி பாபு, இந்த்ரன்ஸ், நட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர்.

Here’s our #Karuppu for you..!
Wishing you all happiness @RJ_Balaji #கருப்பு@trishtrashers @dop_gkvishnu @SaiAbhyankkar @natty_nataraj #Indrans #Swasika @prabhu_sr@DreamWarriorpic pic.twitter.com/a7YQ3l0NS7

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in