‘கலையில் மட்டும்தான் அழுவதையும் ரசிக்க முடியும்’ - காளி வெங்கட்

‘கலையில் மட்டும்தான் அழுவதையும் ரசிக்க முடியும்’ - காளி வெங்கட்
Updated on
1 min read

சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்திகேயன் மணி இயக்கிய இந்தப் படம் கடந்த 6-ம் தேதி வெளியானது. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் காளி வெங்கட் பேசும்போது, ‘‘இந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் என் தந்தையை நினைவுபடுத்தியது. அவருக்குச் சமர்ப்பிக்க, இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நடிக்கும்போது அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடத்தில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை.

கலையில் மட்டும் தான் அழுவதைக் கூட ரசிக்க முடியும். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை படமாக்குவதில் என்ன இருக்கிறது? என்ற கேள்விக்கு இயக்குநர் இந்தப் படத்தைப் பதிலாக அளித்திருக்கிறார். இதனால் இயக்குநரைப் பாராட்டுகிறேன். இந்தப் படம் ஏராளமானவர்களுக்கு புது நம்பிக்கையை அளித்திருக்கிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in