விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

விரைவில் இயக்குநராகும் பார்த்திபனின் மகன்
Updated on
1 min read

பார்த்திபனின் மகன் ராக்கி விரைவில் இயக்குநராக இருக்கிறார்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அனைத்து தளங்களிலும் பணிபுரிந்து வருபவர் பார்த்திபன். இவருக்கு கீர்த்தனா மற்றும் ராக்கி என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கீர்த்தனாவுக்கு திருமணமாகிவிட்டது. ராக்கி பல்வேறு தளங்களில் பணிபுரிந்து வந்தார்.

தற்போது ராக்கி இயக்குநராக இருப்பதை பார்த்திபன் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக பார்த்திபன், “ராக்கி பார்த்திபன்! என் மகன் என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார்.

விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in