கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆக.27-ல் ரீலிஸ்!

கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீட்டா’ ஆக.27-ல் ரீலிஸ்!
Updated on
1 min read

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டாலும், சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 27-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாட்களை கணக்கில் கொண்டு திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

ஜே.கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இதற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளார். முழுக்க காமெடி த்ரில்லர் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். விரைவில் பாடல்கள், ட்ரெய்லரை வெளியிட்டு விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in