‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது? - கவுதம் மேனன் புதிய தகவல்

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது? - கவுதம் மேனன் புதிய தகவல்
Updated on
1 min read

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ‘துருவ நட்சத்திரம்’ வெளியாகும் என்று கவுதம் மேனன் உறுதிப்பட தெரிவித்திருக்கிறார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட வருடங்களாக வெளியாகாமல் இருக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு, வெளியாகாமல் இருக்கிறது. தற்போது இப்படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.

இது தொடர்பாக கவுதம் மேனன், “‘துருவ நட்சத்திரம்’ படத்தினை வெளியிட்டு விட்டுதான் அடுத்த படம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதற்காக இயக்கம், நடிப்பு என அனைத்து பணிகளையும் நிறுத்திவிட்டேன். இந்தப் படத்தினை நிறைய முதலீட்டாளர்களிடம் திரையிட்டு காட்டினேன். அதில் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகையால் படத்தின் மீதிருக்கும் சட்ட சிக்கல்களை சரிசெய்ய பேசி வருகிறேன். ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கண்டிப்பாக படம் வெளியாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரித்து வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. இதனை ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்பட வெளியீடு தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்தமுறை கவுதம் மேனன் உறுதிப்பட தெரிவித்திருப்பதால் கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று தகவல் பரவி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in