வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு!
Updated on
1 min read

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு. ‘தக் லைஃப்’ படத்துக்குப் பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ‘தக் லைஃப்’ படத்தின் மாபெரும் தோல்வியால் இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி இணையவுள்ளது.

இது தொடர்பாக வெற்றிமாறன் – சிம்பு கூட்டணி மூன்று முறை சந்தித்து பேசியிருக்கிறார்கள். உடனடியாக படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளன. முழுக்க வடசென்னையை சுற்றியுள்ள பகுதியில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார்.

சிம்பு படத்தினை முடித்துவிட்டு தான், ‘வடசென்னை’ பணிகளை தொடங்கவுள்ளார் வெற்றிமாறன். சிம்பு நடிக்கவுள்ள படம் குறுகியகால தயாரிப்பாக உருவாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in