கார்த்தியின் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நிறைவு

கார்த்தியின் ‘சர்தார் 2’ படப்பிடிப்பு நிறைவு
Updated on
1 min read

கார்த்தி நடித்து வந்த ‘சர்தார் 2’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

‘சர்தார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘சர்தார் 2’. இதன் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கப்பட்டது. தற்போது ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்தார் 2’. இதில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், சூரஜ் வெஞ்சுரமுடு, ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

தற்போது இதன் இறுதிகட்டபணிகள் மும்முரமாக தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதன் உரிமைகள் விற்கப்பட்டவுடன் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு. ‘சர்தார் 2’ படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் அடுத்ததாக தமிழ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்தி. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in