ஜூலை 11-ல் ‘ஒஹோ எந்தன் பேபி’ ரிலீஸ்
விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் ‘ஒஹோ எந்தன் பேபி’ திரைப்படம் ஜூலை 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ள்ளது.
விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. இதற்கு ‘ஒஹோ எந்தன் பேபி’ எனத் தலைப்பிடப்பட்டு க்ளிம்ஸ் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.
‘ஒஹோ எந்தன் பேபி’ படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். காமெடி, காதல், எமோஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது. படத்தில் உதவி இயக்குநராக நடித்துள்ள ருத்ரா எப்படியாவது இயக்குநராகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பலருக்கு கதை சொல்கிறார்.
அந்த வகையில் படத்தில் நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்ல, ‘ரொமான்ஸ் கதை இல்லையா’ என கேட்கிறார். தொடர்ந்து இயக்குநர் ஆனாரா என்பதை சுவாரஸ்யம் கலந்து படத்தில் பொழுதுபோக்கு அம்சத்துடன் எடுத்திருப்பதாக படக்குழு கூறுகிறது.
இப்படம் ஜூலை 11ம் தேதி வெளியாகும் என்று விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார். இப்படத்தின் நாயகன் ருத்ரா நிஜத்திலும் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக இதற்கு முன்பு பணிபுரிந்துள்ளார். மேலும், FIR, கட்டா குஸ்தி ஆகிய படங்களில் இறுதி கட்டப் பணிகளையும் ருத்ரா மேற்பார்வையிட்டுள்ளார்.
