தமிழ் சினிமா
மஞ்சு விரட்டு கதையில் விமல்!
விமல் நடிப்பில், ‘பரமசிவன் பாத்திமா’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் நடிக்கும் புதிய படத்தை வி.கேந்திரன் இயக்குகிறார். மாசாணி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விமலுடன் பால சரவணன், நரேன், ராஜேந்திரன், சிங்கம் புலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மஞ்சு விரட்டை மையமாகக் கொண்ட இந்தப் படம் காதல், நட்பு, குடும்ப உணர்வைக் கூறும் ஆக்ஷன் படமாக உருவாகிறது. டி.இமான் இசையமைக்கிறார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு மதுரை, பொள்ளாச்சி, காரைக்குடி அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
