ஜீ தமிழில் புதிய மெகா தொடர்: அயலி!

ஜீ தமிழில் புதிய மெகா தொடர்: அயலி!

Published on

ஜீ தமிழ் சேனலில் ஜூன் 2-ம் தேதி முதல் ‘அயலி’ என்ற புதிய மெகா தொடர் ஒளிபரப்பாகிறது. இதில் நாயகியாக தேஜஸ்வினி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, ‘நினைத்தாலே இனிக்கும்’ ஆனந்த் செல்வன் நடிக்கிறார். மேலும் பலர் நடிக்கின்றனர்.

அம்மாவை இழந்த அயலி, தனது சித்தியால் வேலைக்காரி போல் வீட்டில் நடத்தப்படுகிறாள். தனது அம்மா சொன்ன வார்த்தைக்காக குடும்பத்தைப் பெரிதாக மதிக்கிறார். அவர் குடும்பத்துக்குத் தெரியாமல் ரகசிய போலீஸாகவும் இருக்கிறார்.

அவரின் இந்த முகம் வீட்டுக்குத் தெரிய வருகிறதா? குடும்பம் அயலியின் அன்பைப் புரிந்து கொள்கிறதா? தன் அம்மா மீது விழுந்த பழியை அயலி போக்குகிறாரா? என்பது கதை. ஜூன் 2-ம் தேதி முதல், இரவு 8:30 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in