‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!

‘சூப்பர் சிங்கர்’ பூவையார் கதை நாயகனாகும் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’!

Published on

‘சூப்பர் சிங்கர்’ மூலம் பிரபலமான பூவையார் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

தவறான பாதையில் செல்லும் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. த.ஜெயவேல் இயக்கி வருகிறார். அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோஸ் சார்பில் கிளமண்ட் சுரேஷ் தயாரிக்கிறார்.

அஜய் அர்னால்ட் , அர்ஜுன், வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன் என பலர் நடிக்கின்றனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். டி.ஆர். கிருஷ்ண சேத்தன் இசை அமைக்கிறார். தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in