‘96’ 2-ம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதன்? - இயக்குநர் மறுப்பு

‘96’ 2-ம் பாகத்தில் பிரதீப் ரங்கநாதன்? - இயக்குநர் மறுப்பு
Updated on
1 min read

‘96’ பாகம் 2-ல் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு இயக்குநர் பிரேம் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

’96’ இரண்டாம் பாகத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே, இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும், அவருக்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பிரேம் குமார். அதில், “இது வழக்கம் போல் ஒரு தவறான செய்தி. '96’ படத்தில் நடித்த நடிகர்களை வைத்து மட்டும்தான் '96’ 2 எடுக்க முடியும். நடிகர் பிரதீப் ரங்கநாதனை நான் அணுகியது முற்றிலும் வேறு ஒரு கதைக்கு. அதற்கும் '96 பார்ட் 2 படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

நாளுக்கு நாள் பெருகி வரும் தீங்கு விளைவிக்கும் இந்த பொய்ச் செய்திகளை கையாள்வது மிகவும் கடினமாக உள்ளது. இதன் மூலம் உண்மையை சொல்ல அறம் சார்ந்த அச்சு மற்றும் ஊடக நண்பர்களை மீண்டும் நாடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் பிரேம் குமார். இதன்மூலம் விஜய் சேதுபதி விலகல் செய்தியில் உண்மையில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in