‘மார்கன்’ ட்ரெய்லர் எப்படி? - சீரியல் கில்லரை துரத்தும் விஜய் ஆண்டனி!

‘மார்கன்’ ட்ரெய்லர் எப்படி? - சீரியல் கில்லரை துரத்தும் விஜய் ஆண்டனி!
Updated on
1 min read

முன்னணி எடிட்டராக இருந்த லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மார்கன்’. விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படம் மர்மம் கலந்த குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் வில்லனாக அறிமுகமாகிறார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக யுவா, கலை இயக்குநராக ராஜா, இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - பதைபதைக்க வைக்கும் காட்சிகளுடன் தொடங்கும் ட்ரெய்லரில் விறுவிறுப்பு பஞ்சம் இல்லை. படத்துக்கான ஆர்வத்தை தூண்டும் வகையில் பரபரப்பாக கட் செய்யப்பட்டுள்ளது இந்த ட்ரெய்லர். தனது வழக்கமான சீரியஸ் தன்மை கொண்ட கதாபாத்திரத்தையே இதிலும் விஜய் ஆண்டனி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும்போது ‘ராட்சஷன்’ பாணியிலான விறுவிறுப்பான த்ரில்லர் படத்தை எதிர்பார்க்கலாம்.

தொடர்ந்து பல்வேறு பெண்களை குறிவைத்து கொலைகளை செய்யும் ஒரு சீரியல் கில்லர், தனது தனிப்பட்ட இழப்பைத் தொடர்ந்து அவனை துரத்தும் போலீஸ் அதிகாரி விஜய் ஆண்டனி என்பதுதான் கதையின் ஒன்லைனராக இருக்கலாம் என்பதை யூகிக்க முடிகிறது. சிறப்பான திரைக்கதையும், சீட் நுனிக்கு கொண்டு வரும் பரபரப்பான காட்சிகளும் இருந்தால் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. இப்படம் வரும் ஜூன் 27 அன்று வெளியாகிறது. ‘மார்கன்’ ட்ரெய்லர் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in