விஜய் ஆண்டனி படத்துக்காக நீருக்கடியில் ஷூட்டிங்!

விஜய் ஆண்டனி படத்துக்காக நீருக்கடியில் ஷூட்டிங்!
Updated on
1 min read

எடிட்டர் லியோ ஜான் பால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘மார்கன்’. இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார். மர்டர் மிஸ்டரி க்ரைம் த்ரில்லர் படமான இதில் அவர் காவல் அதிகாரியாக, வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர், தீப்ஷிகா உட்பட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவா எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை, நீருக்கடியில் நடப்பது போல, மும்பையில் படமாக்கியுள்ளனர். இந்தக் காட்சி பிரமிப்பாக இருக்கும் என்றும் படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப் படம் ஜுன் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in