‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பட ‘கிஸ்ஸா’ பாடல் நீக்கம் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு எதிரொலி

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பட ‘கிஸ்ஸா’ பாடல் நீக்கம் - இந்து அமைப்பினர் எதிர்ப்பு எதிரொலி
Updated on
1 min read

பல்வேறு இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் பாடல் ஒன்று நீக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் ‘கிஸ்ஸா’ என்ற பாடலில் ‘சீனிவாசா கோவிந்தா’ பாடல் வரிகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இப்பாடல் அமைந்திருப்பதாக இந்து அமைப்பினர் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தப் பாடலை உடனடியாக நீக்கி, ஏழுமலையான் பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும், ஆந்திர மாநில பாஜக செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் ரெட்டி, தயாரிப்பு நிறுவனமான நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட், சந்தானம், தி ஷோ பீப்பிள் தயாரிப்பாளர் ஆர்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

தற்போது இப்படத்தில் இருந்து ‘கிஸ்ஸா’ என்ற பாடலையே நீக்கிவிட்டது படக்குழு. விரைவில் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் சந்தானத்துடன் நடித்துள்ளனர். இப்படத்தை ஆர்யா தயாரித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in