5 மொழிகளில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’

5 மொழிகளில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’
Updated on
1 min read

லவ்டுடே, டிராகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு பிசியாகிவிட்டார், பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த அந்த இரண்டு படங்களும் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தைத் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

இதில் ‘பிரேமலு’ மமிதா பைஜூ நாயகியாகவும் சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ‘டியூட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். பிரதீப் ரங்கநாதனின் படம் 5 மொழிகளில் வெளியாவது இதுவே முதன்முறை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in