DUDE: பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் தீபாவளிக்கு ரிலீஸ்!

DUDE: பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் தீபாவளிக்கு ரிலீஸ்!
Updated on
1 min read

பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படத்துக்கு ‘டூட்’ (DUDE) எனத் தலைப்பிடப்பட்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘டிராகன்’ வெற்றிக்குப் பிறகு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரதீப் ரங்கநாதன். இதனை சுதா கொங்காராவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் இயக்கி வந்தார். இப்படத்தின் பூஜையுடன், முதல் காட்சி வீடியோ வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் படத்துக்கு ‘டூட்’ எனத் தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும் தீபாவளி வெளியீடு என்பதையும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக நிக்கத் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். மேலும், ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியிடவுள்ளார்கள்.

Make way for the 'DUDE', coming to entertain you all BIG TIME #PR04 is #DUDE

All set for a MASSIVE DIWALI 2025 RELEASE
In Tamil, Telugu, Kannada, Malayalam & Hindi.

ing 'The Sensational' @pradeeponelife
Written and directed by @Keerthiswaran_
A @SaiAbhyankkarpic.twitter.com/uM9HIkf9Y7

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in