Last Updated : 04 May, 2025 04:21 PM

 

Published : 04 May 2025 04:21 PM
Last Updated : 04 May 2025 04:21 PM

தீபாவளி வெளியீடு: படங்களுக்கு இடையே போட்டி தொடக்கம்

தீபாவளி வெளியீட்டுக்கு படங்களுக்கு இடையே போட்டி தொடங்கி இருக்கிறது.

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘பைசன் காளமாடன்’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படம் தான் முதன் முதலாக தீபாவளி வெளியீட்டை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில படங்களும் தங்களுடைய வருகையை உறுதிப்படுத்த இருக்கிறார்கள்.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்து வரும் படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய வெளியீட்டு தேதியினை அறிவிக்கவுள்ளது படக்குழு. இப்படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படமும் தீபாவளிக்கு வெளியாகும் எனத் தெரிகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் வெளியீட்டில் உள்ள சில சிக்கல்கள் விரைவில் பேச்சுவார்த்தையில் சரி செய்யப்படும் எனத் தெரிகிறது. இதனை லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இந்த 3 படங்கள் போக, மேலும் சில படங்கள் தீபாவளி வெளியீட்டை முன்வைத்து பணிபுரிந்து வருகிறார்கள். ஏதேனும் ஒரு பெரிய படம் அதிகாரபூர்வமாக வெளியீட்டை உறுதி செய்தால் மட்டுமே இந்தப் போட்டிக்கு முடிவு வரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x