விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ டைட்டில் டீசர் வெளியீடு!

விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ டைட்டில் டீசர் வெளியீடு!
Updated on
1 min read

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் படத்துக்கு ‘தலைவன் தலைவி’ என தலைப்பு இடப்பட்டுள்ளது. இதையொட்டி டைட்டில் டீசர் கவனம் ஈர்த்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இதன் இறுதிகட்டப் பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பாண்டிராஜ் - சந்தோஷ் நாராயணன் இணையும் முதல் படம் இது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, செம்பியன் வினோத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுகுமார் பணிபுரிந்துள்ளார்.

டைட்டில் டீசர் எப்படி? - ‘தலைவன் தலைவி’ டைட்டில் டீசரில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் கணவன் - மனைவியாக கொத்து பரோட்டா போட்டுக் கொண்டே வார்த்தை யுத்தத்தில் ஈடுபடுகின்றனர். வசனங்களும், பெர்ஃபார்மன்ஸும் அழுத்தமாகவும் ஜாலியாகவும் இருக்கின்றன. முடிவில், அவர்கள் இருவரைப் பற்றியும் யோகி பாபு தரும் ஒன்லைன் விளக்கமும் நச் ரகம்.

கூடவே, ஆக்‌ஷன் சம்பவங்களும் உண்டு என்பதை துப்பாக்கிச் சத்தம் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, சந்தோஷ் நாராயணின் இசை பட்டையைக் கிளப்பியிருப்பதையும் கவனிக்கலாம். வீடியோ...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in