வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்தின் தலைப்பு ‘டயங்கரம்’!

வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்தின் தலைப்பு ‘டயங்கரம்’!
Updated on
1 min read

பிரபல யூடியூபரான வி.ஜே.சித்து இயக்கி நடிக்கும் படத்துக்கு ‘டயங்கரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிமுக வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

‘வி.ஜே.சித்து வ்ளாக்ஸ்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருபவர் வி.ஜே.சித்து. இவருடைய வீடியோக்கள் அனைத்துமே இணையவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும். மேலும், பல படங்கள் சிறு கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘டிராகன்’ படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

ப்ளாக் ஷீப் யூடியூப் தளத்தில் இருந்து பிரிந்து தனியாக யூடியூப் சேனல் தொடங்கியவர் வி.ஜே.சித்து. ப்ளாக் ஷீப் அணியில் இருந்து பலரும் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் வி.ஜே.சித்துவும் இணைந்துள்ளார்.

வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த ‘டயங்கரம்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் வி.ஜே.சித்து, அவரது யூடியூப் சேனல் குழுவினர், நடிகர் இளவரசு மற்றும் ஐசரி கணேசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in