Published : 26 Apr 2025 04:18 PM
Last Updated : 26 Apr 2025 04:18 PM
‘கேங்கர்ஸ்’ படம் பார்த்துவிட்டு சிம்பு பாராட்டி இருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியிலான வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு சிம்பு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
‘கேங்கர்ஸ்’ படம் தொடர்பாக சிம்பு “’கேங்கர்ஸ்’ பார்த்தேன். ஒரே சிரிப்பு ரகளை. வடிவேலு சார் தனது மேஜிக்கால் மொத்த படத்தையும் தன்வசப்படுத்தி விட்டார். சுந்தர்.சி அண்ணா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்திருக்கிறார்.
சுந்தர்.சி, வடிவேலு, கத்ரீன் தெரசா, முனீஸ்காந்த், பக்ஸ் பெருமாள், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘கேங்கர்ஸ்’. 15 ஆண்டுகளுக்கு பிறகு சுந்தர்.சி - வடிவேலு கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
Just watched #Gangers – a total laughter riot!#Vadivelu sir steals the show with his magic.
My best wishes to #SundarC anna and the entire team!@AvniCinemax_ @khushsundar pic.twitter.com/tTABasiQiM— Silambarasan TR (@SilambarasanTR_) April 24, 2025
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT