‘கேம் சேஞ்சர்’ தோல்வி ஏன்? - மனம் திறந்த கார்த்திக் சுப்பராஜ்

‘கேம் சேஞ்சர்’ தோல்வி ஏன்? - மனம் திறந்த கார்த்திக் சுப்பராஜ்
Updated on
1 min read

‘கேம் சேஞ்சர்’ தோல்வி குறித்து முதன் முறையாக பேசியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் வெளியான படம் ‘கேம் சேஞ்சர்’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படத்தின் கதை கார்த்திக் சுப்பராஜ் உடையது. அவருடைய கதையை வைத்து ஷங்கர் திரைக்கதை அமைத்து இயக்கி இருந்தார்.

தற்போது ‘கேம் சேஞ்சர்’ படத்தின் தோல்வி குறித்து கார்த்திக் சுப்பராஜ், “சாதாரண ஓர் ஐஏஸ் அதிகாரியை பற்றிய ஒரு கதையினைத் தான் ஆரம்பத்தில் ஷங்கர் சாரிடம் கூறினேன். ஆனால், அது முற்றிலுமாக வேறொரு களத்தில் மாற்றிவிட்டார்கள். அக்கதையில் பல எழுத்தாளர்கள் ஈடுபட்டதால், கதை மற்றும் திரைக்கதை முற்றிலுமாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

‘கேம் சேஞ்சர்’ படம் வெளியான சமயத்தில், அதனை பாராட்டி கார்த்திக் சுப்பராஜ் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அந்தப் பதிவினை முன்வைத்து இப்போது பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in