Published : 24 Apr 2025 06:24 PM
Last Updated : 24 Apr 2025 06:24 PM
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நானி நடிக்க புதிய படமொன்று பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
‘ரெட்ரோ’ மற்றும் ‘ஹிட் 3’ ஆகிய படங்கள் மே 1-ம் தேதி வெளியாக உள்ளன. இதன் இரண்டு படங்களையும் விளம்பரப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்து வருகிறது படக்குழு. இதனிடையே, நானி படமொன்றை இயக்க கார்த்திக் சுப்பராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதனை நானி அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
கார்த்திக் சுப்பராஜ் படம் தொடர்பாக நானி, “எனக்கு கார்த்திக் சுப்பராஜின் இயக்கம் ரொம்பவே பிடிக்கும். அவருடைய ‘ரெட்ரோ’ படமும் மே 1-ம் தேதி வருகிறது. இரண்டு படங்களுமே பெரும் வெற்றியடையும் என நம்புகிறேன்.
எனக்கு கார்த்திக் சுப்பராஜின் படங்கள் மற்றும் அவற்றை கையாளும் விதம் ரொம்பவே பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக சில கதைகளும் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT