சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் குட் சுப்பிரமணி மருத்துவமனையில் அனுமதி

Published on

தமிழில் குணசித்திரம் மற்றும் காமெடி வேடங்களில் நடித்த வர் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி. இயக்குநர்கள் சரவண சுப்பையா, பவித்ரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அவர், இயக்குநராகும் முயற்சியில் இருந்தார். வாய்ப்புகள் கிடைக்காததால் பின்னர் நடிகரானார். பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும், என பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in