காவல்துறை அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் வெற்றி!

காவல்துறை அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் வெற்றி!
Updated on
1 min read

நடிகர் ‘8 தோட்டாக்கள்’ 'வெற்றி', நாயகனாக நடிக்கும் படத்தை 'வெப்' மற்றும் '7/ஜி' படங்களை இயக்கிய ஹாரூன் இயக்குகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை அக்ஷிதா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சாந்தினி, ஜென்சன், கல்கி எனபலர் நடிக்கின் றனர். ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன், மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜான் ராபின்ஸ் இசைஅமைக்கிறார். கே.வி.கிரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப்படம் பற்றி இயக்குநர் ஹாரூன் கூறும்போது, “இதில் ‘8 தோட்டாக்கள்’ படத்துக்குப் பிறகு காவல்துறை அதிகாரியாக, வெற்றி மீண்டும் நடிக்கிறார். அவர் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வருகிறார். அதிக சஸ்பென்ஸ்களை கொண்டு கதையை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு கோயம்புத்தூர், ஏற்காடு, கொடைக் கானல், சேலம் மற்றும் கேரளாவில் நடைபெற உள்ளது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in