வரவேற்பை பெற்ற ‘குபேரா’ முதல் பாடல்

வரவேற்பை பெற்ற ‘குபேரா’ முதல் பாடல்
Updated on
1 min read

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடித்துள்ள படம், 'குபேரா’. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 20 ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைத்துள்ளார். அவர் இசையில் விவேகா எழுதியுள்ள 'போய் வா நண்பா' என்ற பாடல் யூடியூப்பில் நேற்று வெளியானது. தனுஷ் பாடியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in