

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
’ஏஸ்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனிடையே, தற்போது மே 23-ம் தேதி ‘ஏஸ்’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் வியாபார பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.
ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இப்படத்தின் பாடல்களை ஜஸ்டின் பிரபாகரன் உருவாக்கி இருக்கிறார். பின்னணி இசையமைக்கும் பணிகளை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.
கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கும் இதனை ஆறுமுக குமாரே தயாரித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முழுமையாக மலேசியாவிலேயே நடத்தப்பட்டுள்ளது. இப்படத்தின் பணிகளையும் முடித்துக் கொடுத்துவிட்டதால், பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் விஜய் சேதுபதி.
BrACE yourself - The ultimate action spectacle is here #ACE hits theatres on May 23 - Prepare for the Ride of 2025! #ACEFromMay23@rukminitweets @7CsPvtPte @Aaru_Dir @iYogiBabu @justin_tunes @samcsmusic @shreyaghosal @KapilKapilan_#KaranBRawat @andrews_avinash @rajNKPK… pic.twitter.com/DZk4coWcMJ