

காதலரை கரம்பிடிக்க உள்ளார் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா.
முன்னணி நடிகரான அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் இத்தாலியில் நடைபெற்றுள்ளது. அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தனது காதலர் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறார். இவர் ஹண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
அஞ்சனாவின் காதலர் பெயர் இசையா என்று அர்ஜுன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இருவரின் திருமணம் எப்போது நடைபெறும் உள்ளிட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. சமீபத்தில்தான் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் வெகு விமரிசையாக சென்னையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.