ரீ-ரிலீஸ் ஆகிறது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’

ரீ-ரிலீஸ் ஆகிறது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’
Updated on
1 min read

அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் நடித்த ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

‘கில்லி’ படத்தின் மறுவெளியீடு மாபெரும் வெற்றியடைந்த காரணத்தினால், தற்போது பல படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், எதுவுமே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ திரைப்படம்.

தாணு தயாரிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. 2000-ம் ஆண்டில் மே 5-ம் தேதி இப்படம் வெளியானது. பல்வேறு விருதுகளை வென்றாலும், எதிர்பார்த்த வசூலை இப்படம் ஈட்டவில்லை. ஆனால், முதலுக்கு மோசமில்லை என்ற நிலையை எட்டியது. தற்போதைய காலத்துக்கு ஏற்றவகையில் மேம்படுத்தப்பட்டு, விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிக்கவுள்ளது படக்குழு.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி, அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்திருந்தார்கள். இப்படத்தின் ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதினை வென்றார் சங்கர் மகாதேவன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in