பிரபல தயாரிப்பாளர் ராமனாதன் காலமானார் 

பிரபல தயாரிப்பாளர் ராமனாதன் காலமானார் 

Published on

பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எம்.ராமனாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 72.

நடிகர் சத்யராஜின் மேலாளராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், பின்னர் படத்தயாரிப்பில் ஈடுபட்டார். சத்யராஜ் நடிப்பில் 'வாத்தியார் வீட்டுப் பிள்ளை', 'நடிகன்', 'வள்ளல்', 'திருமதி பழனிச்சாமி', 'பிரம்மா', 'உடன்பிறப்பு', 'வில்லாதி வில்லன்' ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் நாயகனாக நடித்த 'தமிழ்ச் செல்வன்' உட்பட பல படங்களைத் தயாரித்துள்ளார்.

உடல் நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலமானார். மறைந்த எம்.ராமனாதனுக்கு பிரமிளா என்ற மனைவி, காருண்யா, சரண்யா ஆகிய மகள்கள் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் வந்ததும் சென்னையில் புதன்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறும். தயாரிப்பாளர் ராமநாதன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in