

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ஓஜி சம்பவம்’ பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் பாடலை ஆதிக் ரவிச்சந்திரன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இணைந்து பாடியுள்ளனர். பாடலின் வரிகளை விஷ்ணு எடவன் எழுதி உள்ளார். ‘திரை அரங்கம் செதறணும்… இவன் பேர் முழங்க கலக்கட்டும்...’ என இந்தப் பாடலின் வரிகள், அஜித் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.
பாடல் வீடியோவில் பல்வேறு படங்களில் அஜித் நடித்த கெட்டப்கள் அணிவகுக்கின்றன. இடையில், அஜித்தின் வசனமும் இடம்பெறுகிறது. ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளுடன் ஏஐ மூலம் ஆக்ஷன் காட்சிகளும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்தப் பாடல் சிங்கிள் வெளியான ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பார்வைகளைக் கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று மாஸ் காட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, அஜித் ரசிகர்களுக்கு தெறிப்பு அனுபவம் தருகிறது இந்த சிங்கிள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 10-ம் தேதி இந்தப் படம் திரை அரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு 9-ம் தேதி இரவே ப்ரீமியர் காட்சிகளை படக்குழு திட்டமிட்டுள்ளது.
> வீடியோ லிங்க்…