

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் தணிக்கை பிரச்சினையில் சிக்கி இருக்கிறது. இதனை மறுதணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா’. சில தினங்களுக்கு முன்பு இதன் ட்ரெய்லரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இணைந்து வெளியிட்டார்கள்.
‘பரமசிவன் பாத்திமா’ ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சிகள், வசனங்கள் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கின. கிறிஸ்துவ மதமாற்றத்தை பின்னணியாக கொண்டு இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது இப்படத்தின் தணிக்கையில் சில காட்சிகள், வசனங்களை நீக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டார்கள். இதை செய்தால் மட்டுமே தணிக்கை செய்யமுடியும் என கூறியிருக்கிறார்கள்.
இந்தச் சர்ச்சையினை தொடர்ந்து, மும்பையில் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு. விரைவில் அக்குழுவினர் படத்தை பார்க்கவுள்ளார்கள். தணிக்கைப் பணிகள் முடிந்தவுடன் தான் வெளியீட்டுத் தேதி குறித்து முடிவு செய்யவுள்ளது படக்குழு.