

‘க்ரிஷ் 4’ திரைப்படம் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்தில் இருந்து சித்தார்த் ஆனந்த் வெளியேறி இருக்கிறார்.
இந்திய திரையுலகில் ‘க்ரிஷ்’ படங்கள் மிகவும் பிரபலம். இதுவரை 3 பாகங்கள் வெளியாகியுள்ளது. இதன் 4-ம் பாகம் நீண்ட காலமாக பேச்சுவார்த்தையில் இருந்து, சில மாதங்களுக்கு முன்பு தான் முடிவானது. ஃபிலிம் க்ராப்ட் மற்றும் மார்பிலிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பது என திட்டமிடப்பட்டது.
தற்போது ‘க்ரிஷ் 4’ படத்தின் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் பொருட்செலவு 700 கோடி என்ற நிலையில் இருப்பதால், இதில் முதலீடு செய்ய எந்தவொரு நிறுவனமும் தயாராக இல்லை. மேலும், இதன் தயாரிப்பு பொறுப்பிலிருந்து சித்தார்த் ஆனந்த்தின் தயாரிப்பு நிறுவனமான மார்பிலிம்ஸ் நிறுவனம் விலகியிருக்கிறது. இதன் இயக்குநராக இருந்த கரண் மல்ஹோத்ராவும் விலகி இருக்கிறார்.
இதனால் ராகேஷ் ரோஷன் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோர் இணைந்து ‘க்ரிஷ் 4’ படத்தினை வேறு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறார்கள். இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் யாவும் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகளைத் தொடங்க வேண்டும். இதனால், இப்படம் தயாரிப்பு தொடங்குவதற்கு மேலும் சில காலமாகும் என்பது மட்டும் உறுதி.