’கைதி 2’ அறிவிப்பை வெளியிட்ட கார்த்தி!

’கைதி 2’ அறிவிப்பை வெளியிட்ட கார்த்தி!
Updated on
1 min read

‘கைதி 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கார்த்தி.

மார்ச் 14-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். தனது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கார்த்தியை சந்தித்தார் லோகேஷ் கனகராஜ்.

இந்தச் சந்திப்பின் போது அவருக்கு காப்பு ஒன்றை அன்பளிப்பாக அணிவித்தார் கார்த்தி. அந்தப் புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து ‘தில்லி ரிட்டன்ஸ்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் ‘கைதி 2’ படத்தில் இணைந்து பணிபுரிய இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ள ‘கைதி 2’ படத்தினை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன. இந்த ஆண்டின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ள யுனிவர்ஸின் தொடக்க படம் ‘கைதி’. இதன் தொடர்ச்சியாக ‘விக்ரம்’ மற்றும் ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது மீண்டும் ‘கைதி 2’ படத்தினை இயக்கவுள்ளார். இந்த யுனிவர்ஸின் இறுதிப்படமாக ‘விக்ரம் 2’ இருக்கும் என பல பேட்டிகளில் உறுதிப்படுத்தி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

DILLI RETURNS

Let it be another fantastic year @Dir_Lokesh@DreamWarriorpic @KvnProductions pic.twitter.com/sLLkQzT0re

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in