மார்ச் 14-ல் மோதும் சிவகார்த்திகேயன் - ரவி மோகன் படங்கள்

மார்ச் 14-ல் மோதும் சிவகார்த்திகேயன் - ரவி மோகன் படங்கள்
Updated on
1 min read

மார்ச் 14-ம் தேதி ‘ரஜினி முருகன்’ மற்றும் ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’ ஆகிய படங்கள் வெளியீட்டை உறுதி செய்திருக்கின்றன.

’ஸ்வீட் ஹார்ட்’, ‘பெருசு’, ‘வருணன்’, ‘ராபர்’, ‘மாடன்’, ‘குற்றம்குறை’, ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’, ‘டெக்ஸ்டர்’ ஆகிய படங்கள் மார்ச் 14-ம் தேதி வெளியாகவுள்ளன. இவற்றுடன் மறுவெளியீடாக சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ மற்றும் ரவி மோகன் நடித்த ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’ ஆகிய படங்களும் வெளியாகின்றன.

2016-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சூரி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ரஜினி முருகன்’. பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம். 2004-ம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன், அசின், பிரகாஷ்ராஜ், நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘எம்.குமரன் S/O மகாலட்சுமி’. இந்த இரண்டு படங்களுமே ஒரே சமயத்தில் மறுவெளியீட்டில் வெளியாகிறது.

மேலும், சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன் - ரவி மோகன் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு இலங்கையில் நாளை முதல் தொடங்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in