

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பணிகள், பட பூஜை இன்று சென்னையில் தொடங்கியது.
‘அரண்மனை 4’ படத்துக்குப் பிறகு சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் ‘மூக்குத்தி அம்மன் 2’.
வேல்ஸ் நிறுவனம், ரெளடி பிக்சர்ஸ், அவ்னி சினி மேக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
‘மூக்குத்தி அம்மன் 2’-வின் முதன்மைக் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
முதல் பாகம் போல் அல்லாமல் இந்த இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக் தயாரிக்கிறது வேல்ஸ் நிறுவனம்.
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது.
மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இந்தப் படத்தில் நயன்தாரா உடன் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
‘மூக்குத்தி அம்மன் 2’ இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜையில் யோகிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘மூக்குத்தி அம்மன் 2’ பட பூஜையில் நயன்தாராவுடன் நடிகைகள் குஷ்பு, மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.