அசோக் செல்வன் - கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய படம்!

அசோக் செல்வன் - கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய படம்!
Updated on
1 min read

அசோக் செல்வம் - கீர்த்தி சுரேஷ் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

‘ஒன்ஸ்மோர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களை தயாரித்து முடித்துள்ளது மில்லியன் டாலர் நிறுவனம். இப்படங்களின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது இந்நிறுவனம்.

புதுமுக இயக்குநர் இயக்கவுள்ள இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. தற்போது இதர நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என முனைப்பில் இருக்கிறார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in