‘குட் பேட் அக்லி’ டீசரால் அஜித் மகிழ்ச்சி: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்

‘குட் பேட் அக்லி’ டீசரால் அஜித் மகிழ்ச்சி: ஆதிக் ரவிச்சந்திரன் தகவல்
Updated on
1 min read

ஒரு ரசிகராக ‘குட் பேட் அக்லி’ இயக்கி இருக்கிறேன் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த டீசரால் அஜித் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.

‘குட் பேட் அக்லி’ படத்தின் டீசருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக தமிழகத்தில் முதல் நாள் வசூல் சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். இதனிடையே, டீசர் வரவேற்பு குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “ஒரு ரசிகராக ‘குட் பேட் அக்லி’ இயக்கி இருக்கிறேன். அதை ரசிகர்கள் கொண்டாடும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. போஸ்டர், பேனர் எல்லாம் வைத்து அஜித் சார் படத்தை பார்த்த எனக்கு, அவரை வைத்து இயக்க படம் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டீசருக்கான வரவேற்பைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அஜித் சாரும் டீசரைப் பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார். ஏப்ரல் 10-ம் தேதி படம் வெளியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி ஏப்ரல் 10-ம் தேதி வெளியிடுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in