Published : 26 Feb 2025 07:52 AM
Last Updated : 26 Feb 2025 07:52 AM

‘வருணன்’ படத்துக்கு சத்யராஜ் வாய்ஸ்

துஷ்யந்த் ஜெயபிர​காஷ், கேப்​ரியல்லா இணைந்து நடித்​துள்ள படம் ‘வருணன்'. ஜெயவேல்​முருகன் இயக்கி​யுள்​ளார். யாக்கை பிலிம்ஸ் தயாரித்​துள்ளது. வான் புரொடக்​‌ஷன்ஸ் இணை தயாரிப்பு செய்​துள்ளது. இதில் ராதா ரவி, சரண்​ராஜ், ஷங்கர்​நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்​துள்ளனர். போபோ சஷி இசையமைத்​துள்ளார். ஸ்ரீராம சந்தோஷ் ஒளிப்​ப​திவு செய்​துள்ளார்.

மார்ச் 14 -ம் தேதி வெளியாக இருக்​கும் இந்தப் படம் பற்றி ஜெயவேல்​முருகன் கூறும்​போது, "இது வட சென்னை​யில் நடக்​கும் கதை. இன்றைக்​குத் தண்ணீர் கேன் தவிர்க்க முடி​யாத​தாகி விட்​டது. ராதா ரவி, தண்ணீர் கேன் சப்ளை செய்​பவர். அவரிடம் மதுரை, நெல்லை உட்பட தென் மாவட்​டங்​களில் இருந்து வந்து சிலர் வேலைபார்க்​கிறார்​கள்.

அதில் ஒருவர் துஷ்யந்த். இவருக்​கும் தண்ணீர் கேன் விற்​கும் இன்னொரு கோஷ்டிக்​கும் நடக்​கும் பிரச்​சினை​தான் படம். வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகிய ஐம்பூதங்கள் பொது​வானவை என்ற கருத்​தை​யும் தண்ணீரின் அவசி​யத்​தை​யும் சொல்​லும் படம் இது. ‘நீரின்றி அமையாது உலகு' என்பது​தான் படத்​தின் கேப்​ஷன். தண்ணீர் கடவுள் பேசுவதுபோல, 'வாய்ஸ் ஓவர்', படத்​தின் பல இடங்​களில் வரும். அந்த குரலை நடிகர் சத்யராஜ் கொடுத்​திருக்​கிறார். படத்​தின் டிரெய்​லர் வெளி​யாகி வர​வேற்​பைப் பெற்றிருக்​கிறது" என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x