கேளிக்கை வரியை ரத்து செய்க: கமல்ஹாசன் கோரிக்கை

கேளிக்கை வரியை ரத்து செய்க: கமல்ஹாசன் கோரிக்கை
Updated on
1 min read

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (ஃபிக்கி) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்றது.தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

அவர் பேசும்போது, ‘‘தொழிற்துறையினரின் கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கிற, அவற்றைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்கிற அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்பதால், இந்த மேடையை பயன்படுத்திக்கொண்டு திரையுலகு சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கிறேன். மத்திய அரசின் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் திரைத்துறை அல்லல்படுகிறது. இத்துடன் மாநில அரசின் கேளிக்கை வரியும் சேரும்போது இரட்டை வரிவிதிப்பாகி விடுகிறது. மாநில அரசின் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டால், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் தமிழ்த்திரையுலகுக்கு நிவாரணமாக அமையும்” என்றார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பரிசீலனை செய்வதாக குறிப்பிட்டார். தவிர, பையனூரில் 90 ஏக்கர் நிலப்பரப்பில் திரைக் கலைஞர்களுக்கான குடியிருப்பு அமைய இருப்பதற்கான தமிழ்நாடு அரசின் அறிவிப்பையும் வெளியிட்டார். இந்த அறிவிப்புகளுக்காக தமிழ்த் திரையுலகம் சார்பாக கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in