காதலர் தினத்துக்காக ஸ்ரீகாந்த் தேவா உருவாக்கிய ஆல்பம்

காதலர் தினத்துக்காக ஸ்ரீகாந்த் தேவா உருவாக்கிய ஆல்பம்
Updated on
1 min read

இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வீடியோ ஆல்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த ஆல்பம், ‘ஸ்ரீகாந்த் தேவா அஃபிஸியல்’ என்ற அவரது யூடியூப் சேனலில் நாளை வெளியாகிறது.

இதுபற்றி ஸ்ரீகாந்த் தேவா கூறும்போது, “சினிமாவுக்கு வந்து 25 வருடம் ஆகிவிட்டது. தொடர்ந்து இசை அமைத்து வருகிறேன். பின்னணி இசை அமைக்கவும் வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், காதலர் தினத்துக்காக, ‘பட்டாக்கத்தி கண்ணால’ என்ற ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறேன். இதன் பாடலை காதல் மதி எழுதியிருக்கிறார். ஷ்யாம் விஷால், ஸ்ரீனிஷா பாடியுள்ளனர். அஸ்வின் இயக்கி இருக்கிறார்.

சஞ்சு, சனம் காதலர்களாக இதில் நடித்துள்ளனர். இனி 3 மாதத்துக்கு ஒரு முறை ஆல்பம் பாடல் வெளியிட இருக்கிறேன். ஆல்பம் பாடல்களில் சுதந்திரமாக செயல்பட முடியும். இப்போது இசை அமைப்பாளர்கள் கச்சேரிகளில் கவனம் செலுத்துவது பற்றிக் கேட்கிறார்கள். விரைவில் கச்சேரிகள் நடத்த இருக்கிறேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in