

படப்பிடிப்புக்கு இடையே வீடியோ பதிவின் மூலம் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் நடிகர் சூரி.
திருச்சியில் ‘மாமன்’ படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார் சூரி. மார்ச்சில் படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறைக்கு வெளியிட்டு விட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு பணிபுரிந்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் சூரி. அப்போது எதிரில் சுவற்றில் வெள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அதனை வீடியோவாக எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார் சூரி. அத்துடன், “சுவர்களில் நிறங்களை பதித்தேன் - இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!” எனவும் குறிப்பிட்டுள்ளார். நடிகராகும் முன்பு பல்வேறு வேலைகளில் இருந்துள்ளார் சூரி. அப்போது வெள்ளை அடிக்கும் வேலையை பார்த்திருப்பதை தான் இந்தப் பதிவின் மூலம் நினைவுகூர்ந்துள்ளார்.
‘மாமன்’ படத்தினை முடித்துவிட்டு, எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூரி. இதனை ‘செல்ஃபி’ படத்தின் இயக்குநர் மதிமாறன் இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
“சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!”
“Started my life as a painter, painting walls—today, I paint emotions on screen. Life moves when we dare to dream!” #கனவுகள் pic.twitter.com/AEncYqILwl