‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ 4-வது சிங்கிள் எப்படி?

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ 4-வது சிங்கிள் எப்படி?
Updated on
1 min read

‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் நான்காவது சிங்கிள் பாடல் வீடியோ வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’. அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படமான ‘ராயன்’ வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கவனிக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூவ் தாமஸ் உள்ளிட்ட இளம் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் பிப்ரவரி 21 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக, இப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ, யெடி ஆகிய பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனைத் தொடர்ந்து, இந்தத் திரைப்படத்தின் நான்காவது பாடல் ‘புள்ள’ தற்போது வெளியாகியுள்ளது.

‘உன் கூட சேர்ந்தா போதும் புள்ள. இன்னும் நான் தாங்க தேம்பு இல்ல’ போன்ற வரிகள் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் உள்ளன. பாடலின் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து, இப்பாடலை பாடியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in