

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ராஜேஷ் நாயகனாக அறிமுகமாகிறார்.
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினை நடத்தி வந்தவர் ராஜேஷ். பல்வேறு வெற்றி படங்களைக் கொடுத்தவர். தற்போது அவருக்கும் நாயகன் ஆசை வந்திருக்கிறது. இதற்காக நடிப்பு பயிற்சி எல்லாம் எடுத்து, படப்பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறார்கள். இதனை அவரே வேறொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரித்தும் வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை பா.இரஞ்சித்தின் உதவியாளர் இயக்கி வருவதாக தெரிகிறது. அவரது பெயரை ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு. இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுல்ள பகுதிகளில் நடத்தி வருகிறார்கள்.
’அறம்’, ‘ஐரா’, ‘குலேபகாவலி’, ‘க.பெ.ரணசிங்கம்’, ‘டிக்கிலோனா’, ‘டாக்டர்’, ‘அயலான்’ உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ராஜேஷ். 24 ஏ.எம் நிறுவனத்தின் கடனை ஏற்றுக் கொண்டதால் சிக்கல்களில் மாட்டிக் கொண்டார் என்கிறார்கள் திரையுலகில். இவரது தயாரிப்பில் ‘ஆலம்பனா’ என்ற படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளியிட முடியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.