அஜித்துக்கு பாராட்டு விழா: யோகிபாபு கோரிக்கை

அஜித்துக்கு பாராட்டு விழா: யோகிபாபு கோரிக்கை
Updated on
1 min read

பத்ம பூஷண் விருது வென்றுள்ள நடிகர் அஜித் குமாருக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று யோகிபாபு கோரிக்கை விடுத்துள்ளார்.

‘பேபி & பேபி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபுவும் கலந்துக் கொண்டார். இந்த விழா முடிந்து கிளம்பும்போது அஜித் குறித்து யோகிபாபுவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

“அஜித்துக்கு பத்ம பூஷண் விருது கிடைத்திருப்பது குறித்து” என்ற கேள்விக்கு யோகிபாபு, “எவ்வளவு பெரிய சாதனை படைத்துள்ளார். அது பெரிய விஷயம். அவரை நாம் பாராட்ட வேண்டும். அவருக்கு அனைவரும் சேர்ந்து பாராட்டு விழா நடத்த வேண்டும். அந்தப் பாராட்டு விழாவில் அனைவரும் அவரைப் பற்றி பெருமையாக பேச வேண்டும்” என்று பதிலளித்துள்ளார் யோகிபாபு.

பிரதாப் இயக்கியுள்ள ‘பேபி & பேபி’ படத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தினை யுவராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in