அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர் ஆனார் ரவிவர்மன்!

அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர் ஆனார் ரவிவர்மன்!
Updated on
1 min read

தமிழில் ஆட்டோகிராப், அந்நியன், தசாவதாரம், வேட்டையாடு விளையாடு, பொன்னியின் செல்வன், இந்தியில் பிர் மிலேங்கே, பார்ஃபி, சஞ்சு உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் ரவிவர்மன்.

இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ்’ கம்பெனி படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர், அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினராக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இதுபற்றி ரவிவர்மனிடம் கேட்டபோது, “உலகம் எங்கும் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள், இந்தச் சங்கத்தில் இணைவதைக் கனவாகக் கொண்டிருப்பார்கள். ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளை வென்ற உலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள் உறுப்பினர்களாக இயங்கும் தளத்தில் நானும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது" என்றார்.

அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கத்தின் உறுப்பினர் ஆகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ரவிவர்மன் பெற்றுள்ளார். இதற்கு முன் சந்தோஷ் சிவன் மட்டுமே இந்தச் சங்கத்தின் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in